2025 மே 14, புதன்கிழமை

அகதிகள் முகாமில் தாக்குதல் ; 50 பேர் பலி

Freelancer   / 2023 நவம்பர் 01 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "காசா எல்லை பகுதியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இஸ்ரேல் இந்த தாக்குதல் மூலம் அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை குறிவைத்து இருக்கிறது," என்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X