Janu / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என கூறப்படுகிறது.
ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவுகணையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுடவேண்டாம் என்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டன.
இதையடுத்து 9எம்730 புரேவெஸ்ட்னிக் என்று அணு சக்தி ஏவுகணையை ரஷ்யா அறிமுகம் செய்தது. இதை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டத்துக்கான ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் கூறினார். இந்த ஏவுகணையை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செலுத்த முடியும். இது பறந்து செல்லும் பாதையையும் கணிக்க முடியாது என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஏவுகணையை ரஷ்யா கடந்த 21-ம் திகதி பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கி.மீ தூரம் சென்றதாக ரஷ்ய ராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் கூறினார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago