2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அதிபரை பணயக்கைதியாக வைத்த மாணவர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 09 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை அதிபர் ஒருவரை மாணவர்கள் பணயக் கைதியாக வைத்திருந்ததாக சீனப் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.

பட்டங்கள் மதிப்பிழக்கச் செய்யப்படும் என்ற அச்சத்திலேயே இவ்வாறு மாணவர்கள் செய்துள்ளனர்.

ஜியாங்சு மாகாணத்திலுள்ள நன்ஜிங் கல்லூரியை தொழில் நிறுவகமொன்றுடன் இணைப்பதற்கு எதிராகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு இவ்வாறு செய்துள்ளனர்.

பொலிஸார் மிளகு ஸ்பிறேயை பிரயோகித்ததிலும், பொல்லுகளைப் பயன்படுத்தியதிலும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

சீனாவில் ஒன்றுகூடல்கள் கட்டுப்படுத்தப்படுகையில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் அரிது ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .