2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உக்ரேன் ஜனாதிபதி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 10 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் தங்களது நிபந்தனைகளை ஏற்றால் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர்  ஸெலென்ஸ்கி (volodymyr zelensky) தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யாவுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தோம். ஆனால், அந்த அழைப்புக்கு புதிய பயங்கரவாதத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் மூலமும் மிரட்டல்கள் மூலமும் ரஷ்யா பதிலளித்து வந்தது.

எனவே, உண்மையான அமைதிப் பேச்சுவார்ததையில் ஈடுபட ரஷ்யாவை உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் ஈடுபட வேண்டுமென்றால், முதலில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள உக்ரேன் பகுதிகளிலிருந்து ரஷ்யப் படையினா் வெளியேறி, உக்ரேனின் இறையாண்மையை நிலைநாட்ட வேண்டும்.

அத்துடன், ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரேனில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அந்த நாடு இழப்பீடு அளிக்க வேண்டும். போர் குற்றங்களில் ஈடுபட்ட தங்கள் நாட்டு இராணுவத்தினருக்கும் ரஷ்யா தண்டனை பெற்றுத் தருவதுடன், அதுபோன்ற போர்க் குற்றங்கள் இனி நிகழாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எங்களது இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கின்றோம் ” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X