2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அதிரடி திட்டங்களை வெளியிட்ட ‘லிஸ் ட்ரஸ்‘

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக ‘லிஸ் ட்ரஸ்‘  தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொண்டுவரவுள்ள புதிய  திட்டங்கள் தொடர்பில் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

அந்தவகையில் விலைவாசி உயர்வால் கடும் அவதியில் இருக்கும் பிரித்தானிய மக்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் வகையில் 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரண மற்றும் வரிக்குறைப்பு உள்ளிட்ட விடயங்கள் அத் திட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக ”நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது முதல் வாரத்திலேயே முக்கிய முடிவெடுக்கப்படும் என தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது லிஸ் ட்ரஸ் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அவர் பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்த நேரத்தில் எரிசக்தி கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லிஸ் ட்ரஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் மொத்த விலையை கட்டுப்படுத்தி எரிசக்தி கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளதாக லிஸ் ட்ரஸ் கருதுகிறார்.
 
ஆனால் இந்த முடிவால் பல பெரிய நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் தரப்பில் இருந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X