Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு குறைந்தது 10 சதவீத வரியொன்றை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (03) வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் முன்னர் ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 20 சதவீதத்துக்கு மேலதிகமாக சீன இறக்குமதிகளுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக மொத்தமாக 54 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமானது 20 சதவீத வரியை எதிர்கொள்வதுடன், ஜப்பானுக்கு 24 சதவீதமும், தென்கொரியாவுக்கு 25 சதவீதமும் வரி விதிக்கப்படவுள்ளது.
அடிப்படை வரி வீதங்கள் சனிக்கிழமை (05) முதல் நடைமுறைக்கு வருவதுடன், உயர் பதிலடியான வீதங்கள் புதன்கிழமை (09) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025