2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வருகின்ற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்தது. 

உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 

இதனால் உலக நாடுகள் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரவியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நியூயோர்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .