2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி: இந்திய வம்சாவளி இளைஞர் கைது

Editorial   / 2023 மே 24 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், "அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ வசிப்பிடமாகிய வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழையும் முயற்சியில் ஒருவர் டிரக்கை ஓட்டிவந்தார். அவரைத் தடுத்து விசாரித்தபோது அவர் இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் தற்போது மிசூரி மாகாணத்தில் வசித்து வருவதும் அவருடைய பெயர் சாய் வர்ஷித் என்பதும் தெரியவந்தது. அவர் பாதுகாப்பு தடுப்புகளை மீறி வெள்ளை மாளிகையின் உள்ளே வாகனத்தைச் செலுத்த முயன்றதால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது அந்த நபர் ஜனாதிபதி பைடனை கொலை செய்யப் போவதாகத் தெரிவித்தார். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை கடத்திக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருடைய ட்ரக்கில் எந்த ஆயுதமும், வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை.

சாய் வர்ஷின் இந்தத் தாக்குதலை ஆறு மாதங்களாக திட்டமிட்டு வந்திருக்கிறார். இதனை ஒரு குறிப்பேட்டில் அவர் எழுதிவைத்திருந்தார். வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டின் பொறுப்பில் அமர்வதே தனது குறிக்கோள் என்று அந்தக் குறிப்பில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்து இருப்பது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .