2025 மே 15, வியாழக்கிழமை

அமெரிக்காவில் அரிசிக்கு வரிசை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த உத்தரவு வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையால் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மக்கள் அரிசியை பதுக்கி வைப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், பல அமெரிக்க கடைகள் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.

இதனால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, ‘ஒரு குடும்பத்திற்கு 1 அரிசி மூட்டை மட்டுமே’ என்கிற விதியையும் அமெரிக்க கடைகள் பின்பற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்களிடையே இந்த நிலை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .