2025 மே 14, புதன்கிழமை

அமெரிக்க முதல் பெண்மணிக்கு கொரோனா

J.A. George   / 2023 செப்டெம்பர் 05 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மனைவிக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியா வருவார். திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வரும் 7ஆம் திகதி பிடன் இந்தியா செல்கிறார். செப்டம்பர் 8 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்துகிறார். 

செப்டம்பர் 9ம் திகதி ஜி-20 மாநாட்டில் ஜோ பிடன் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .