Editorial / 2019 ஒக்டோபர் 11 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு (Abiy Ahmed Ali) 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டதுடன், இந்த விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் விருது எத்தியோப்பிய நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும், அண்டை நாடான எரித்தியாவுடன்பல ஆண்டுகளாக நிலவிய எல்லை பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுத்ததற்காகவும் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
1901ம் ஆண்டு முதல் இதுவரை 99 நோபல் அமைதி விருதுகள் தனியார் மற்றும் 24 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் விருது நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலும், பிற விருதுகள் சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025