2021 மே 08, சனிக்கிழமை

அமெரிக்க தேவாலயத் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபருக்கு மரண தண்டனை கோரப்படும்

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள கறுப்பினத்தவர்களுக்கான தேவாலயமொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்பது பேரைக் கொன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெள்ளையினத்தவரான டைலன் றூப்-க்கு எதிராக, மரண தண்டனைக்கான வழக்கு விசாரணைகள் நடைபெறுமென, அமெரிக்காவின் மத்திய வழக்குத் தொடருநர்கள் அறிவித்துள்ளனர்.

22 வயதான டைலன் றூப், சார்லெஸ்டோனிலுள்ள ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கான தேவாலயத்தில், பைபிள் கற்கைக்காக இணைந்துகொண்டதோடு, அங்கிருந்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார். 2015ஆம் ஆண்டு ஜூனில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 9 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஏற்கெனவே, மாநில நீதிமன்றில் மரண தண்டனைக்கான விசாரணைகளை அவர் எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது மத்திய நீதிமன்றாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். கறுப்பினத்தவர் மீது வெறுப்பைக் கொண்டிருந்த டைலன், வெள்ளையின ஆதிக்கத்தை நியாயப்படுத்தி, இணையத்தளமொன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X