2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“அவளது உதடுகள் ஒரு இயந்திர துப்பாக்கி போல”: வர்ணித்த ட்ரம்ப்

Editorial   / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளராக பணியாற்றும் 27 வயதுடைய கேரோலின் லெவிட்டைப் புகழ்ந்த விதம், தற்போது உலகளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, டிரம்ப் கூறியதாவது, “அவள் ஒரு நட்சத்திரம். அவளது முகம், புத்திசாலித்தனம், உதடுகள்அவை அசைவது ஒரு இயந்திர துப்பாக்கி போல இருக்கிறதுஎன புகழ்ந்தார்.

 கேரோலின் லெவிட்ட், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் முதன்மை செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர், டிரம்ப் செய்துள்ள சர்வதேச அமைதி முயற்சிகளை மேற்கோளாகக் காட்டி, அவருக்கு நோபல் அமைதி பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

 இதை தொடர்ந்து, டிரம்ப் செய்தியாளரை வர்ணித்தது சமூக வலைதளங்களில் வன்மையான விமர்சனங்களை சந்திக்கிறது. இது தொழில்முறை ஒழுங்குகளை மீறுவதாகவும், ஒரு பெண் ஊழியரின் மீதான தவறான பார்வையை வெளிப்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது சாதாரண வேலை இடத்தில் நடந்திருந்தால், அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை வந்திருக்கும்என ஒரு சமூக வலைதள பயனர் பதிவிட்டுள்ளார். மேலும், “ஏன் முக்கிய ஊடகங்கள் இந்த விவகாரத்தில் மௌனம் காத்திருக்கின்றன?” என சிலர் வினவியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X