2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

`ஆங் சான் சூகிக்கு` 26 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியன்மாரின் தலைவர்  ‘ஆங் சான் சூகிக்கு‘(Aung San Suu Kyi) மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி, கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

எனினும்,இத் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்த இராணுவம், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனையடுத்து 76 வயதான ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அதேசமயம் இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியமை , கொரோனா விதிகளை மீறியமை, சட்டங்களை மீறியமை , ஊழல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள்  அவர் மீது சுமத்தப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியமை ஆகிய வழக்குகளில் சூச்சிக்கு சுமார் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில்,தற்போது மீண்டும் ஒரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 இதனையடுத்து சுமார் 26 ஆண்டுகள் சூகி சிறைத் தண்டனையை அனுபவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X