Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று, ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷில், கடந்த ஓகஸ்ட் மாதம், மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
இதற்கிடையே, மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், அதிலும் குறிப்பாக ஜூலை 15 முதல் ஓகஸ்ட் 5 வரையிலான மூன்றே வாரங்களில் மட்டும், உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,400ஐ தாண்டியுள்ளது என்று, ஐ. நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. .
அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகவும், போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகவும் ஐ. நா. தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, போராட்டங்களின்போது மனித உரிமை மீறல் குற்றங்கள் அதிகளவில் நடந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஐ. நா. கூறியுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago