2025 மே 15, வியாழக்கிழமை

ஆண் துணையின்றி காரில் செல்லக்கூடாது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது.

உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியில் காரில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும் புர்கா உடை  கட்டாயம் அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .