2026 மார்ச் 12, வியாழக்கிழமை

’ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மிகப்பெரிய வெற்றி : டிரம்ப் அறிவிப்பு

Freelancer   / 2026 மார்ச் 12 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை கிட்டத்தட்ட அழித்துவிட்டது என்றும், குறிப்பாக அந்நாட்டின் விமானப்படை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் தற்போது போரிடுவதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தடுக்கவே இந்தத் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், தான் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தாக்குதலை நிறுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .