2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Editorial   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (22)  அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்.) உறுதி செய்துள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் அறிக்கைகளின்படி, நில அதிர்வு   துல்லியமாக அதிகாலை 6:30 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அட்சரேகை 37.10 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 71.12 டிகிரி கிழக்கு என்று அடையாளம் காணப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. சம்பவத்தின் உறுதியான விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .