Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகத்தால் (சி.ஐ.ஏ) ஆதரவளிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நடவடிக்கை படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்குப்புறமாக கிராமங்களிலுள்ள வீடுகளில் இரவுநேர நடவடிக்கைகள், வலிந்த காணாமல் போதல்கள், சுகாதார வசதிகளின் மீதான தாக்குதல்கள், சட்டத்துக்கு புறம்பான கொலைகள் என்பன போர்க்குற்றங்களாக இருக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட 50 பக்க அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானின் ஒன்பது மாகாணங்களில் இடம்பெற்ற 14 சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பதிவு செய்துள்ளது.
படைகளின் தடுப்பில் இருக்கும்போதே மக்களை படைகள் சுட்டுக் கொண்டதாகவும், முழுச் சமூகங்களையுமே இரவுநேரத் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தும் வான் தாக்குதல்கள் மூலம் பயங்கரவாதத்துக்குள் உள்ளடக்கியதாக குறித்த அறிக்கைக்குரியவரான பற்றிசீயா கொஸ்மன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இவ்வாண்டில் இதுவரைக்கும் 484 பொதுமக்களின் உயிரிழப்புகள், 777 பொதுமக்களின் காயங்களுக்கு ஆப்கானிஸ்தான், சர்வதேச இராணுவப் படைகள் காரணமாயிருக்கின்றன என்ற ஐக்கிய நாடுகளின் கண்டுபிடிப்புகளுடன் இவை ஒத்துப் போகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago