2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் காரணி எது? புதிய தகவல்

S.Renuka   / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதில் 50 சதவீதத்துக்கும் மேல் மரபணுக்களுக்கே பங்கு உண்டு என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சயன்ஸ் (Science) என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, ஒருவரின் ஆயுள்காலத்தைத் தீர்மானிப்பதில் மரபணு முக்கியப் பங்கு வகிக்கிறது. விபத்துகள் அல்லது தொற்றுநோய்கள் போன்ற வெளிப்படையான காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு மனிதரின் ஆயுட்காலத்தில் 55 சதவீதம் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது. இது முந்தைய கணிப்புகளைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

டென்மார்க், ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த இரட்டையர்களின் ஆயுட்கால தரவுகளைக் கொண்டு இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 

கடந்த காலங்களில் தொற்றுநோய்களாலும் விபத்துகளாலும் ஏற்படும் மரணங்கள் அதிகமாக இருந்ததால், மரபணுவின் உண்மையான தாக்கம் மறைக்கப்பட்டிருந்தது. 

தற்போது மருத்துவ வசதிகள் பெருகியுள்ள நிலையில், மரபணுக்களே நீண்ட ஆயுளுக்கு மிக முக்கியக் காரணமாக விளங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மீதமுள்ள 45 சதவீத வாய்ப்பு உணவு மற்றும் வாழ்க்கை முறையிலேயே உள்ளது என்பதை விஞ்ஞானிகள் நினைவூட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X