Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களில், கடந்த வாரயிறுதியில் ஏறத்தாழ 40 பேரளவில் கொல்லப்பட்டதாகவும், சில நூற்றுக்கணக்கானோர் அவர்களது வீடுகளை விட்டு வெளியேறியதாக உள்ளூர் அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், ஆயுதக்குழுகளுக்கிடையே கடந்தாண்டு பெப்ரவரியில் சமாதான ஒப்பந்தமொன்று இணங்கப்பட்டதன் பின்னரான மோசமான வன்முறையொன்றாக இது பதிவாகியுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த மிஷெல் டிஜோடொடியாவை செலெகா கூட்டணியிலுள்ள பிரதானமாக முஸ்லிம் போராளிகள் அகற்றியதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ ஆயுதக்குழுகளிலிருந்தான பதில் தாக்குதல்களிலிருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கே சமாதான இப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் செலெகா ஆயுதக்குழுவான எஃப்.பி.ஆர்.சியின் வெவ்வேறான பிரிவுகளுக்கிடையே கிழக்கு நகரான பிறியாவில் கடந்த சனிக்கிழமை மோதல்கள் வெடித்ததாக ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணி தெரிவித்துள்ளது.
உள்ளூர் வைத்தியசாலையில் சடல எண்ணிக்கையின்படி 38 பேர் கொல்லப்பட்டுள்ளபோதும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50க்கு அருகில் இருக்கலாம் என பிராந்திய அதிகாரி எவரிஸ்டே பிங்குய்னென்ட்ஜி கூறியுள்ளார்.
இந்நிலையில், மோதல்களில் 41 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் அன்டோனி எம்பாவோ பொகோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் பிறியாவில் தரையிறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அங்கு அமைதி நிலவுவதாக அமைதி காக்கும் படையின் பேச்சாளர் விளாடிமிர் மொன்டெய்ரோ கூறியுள்ளார்.
சமாதான ஒப்பந்தம் இணங்கப்படுவதற்கு முன்பாக இரத்தினக்கல் அகழ்வு மய்யமான பிறியாவில் எதிரணிப் பிரிவுகளின் பிரசன்னம் காரணமாக வழமையான மோதல் புள்ளியாகக் காணப்பட்டிருந்தது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago