Freelancer / 2025 மார்ச் 09 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ஜென்டினாவில் அடைமழை மற்றும் வெள்ளத்தில் சிக்குண்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தின் பாஹியா பிளான்கா பகுதியில் அடைமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், கட்டிடங்களை சுற்றி வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது.
இதுபற்றி மாகாணத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேவியர் அலன்சோ வெளியிட்ட அறிக்கையில்,
“அடைமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட பயணங்களை அந்நாட்டு ஜனாதிபதி ஜேவியர் மிலெய் இரத்து செய்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி குழுக்கள் செல்வது உறுதி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழலில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago