2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து விமான நிலையத்தில் பயணிகள் அவதி

Freelancer   / 2024 ஜூன் 24 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் அவதி அடைந்த அதேநேரம், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இங்கிலாந்து மொன்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று (23) முதலாம், இரண்டாம் முனையங்களில் மின்சாரம் தடைபட்டது. அதனால் விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், அங்கு தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்ட நிலையில் மின் தடை காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

அதேசமயம், மூன்றாம் முனையத்திலிருந்து பயணம் செய்யவிருப்போர் நிலையத்திற்கு வழக்கம்போல் வரலாம் எனக் கூறப்பட்ட நிலையில், காத்திருக்கும் பயணிகளின் விமானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்போது தான் கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என விமான நிலையம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், பயணிகள் விமான நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி, அவதியடையும் காணொளி சமூகவலைதளத்தில் வெளியாகி பரவிவருகின்றது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X