2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

இந்தோனேசியாவில் நிதி அமைச்சர் உட்பட 5 பேர் நீக்கம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. 
இதற்கிடையே அங்குள்ள எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. 

குறிப்பாக, தனிநபர் வருமானம் சுமார் ரூ.17 ஆயிரமாக உள்ள நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டு வந்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 
அப்போது ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாகினர். இதனால் எம்.பி.க்களின் சம்பளம், சலுகைகள் குறைக்கப்பட்டன. 

மேலும், அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியுற்றதால் அமைச்சர் சபையிலும் அதிரடி மாற்றத்தை ஜனாதிபதி பிரபாவோ சுபியாண்டோ அறிவித்தார். 
அதன்படி. நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி, இராணுவ அமைச்சர் புடி குணவன் உட்பட 5 அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .