2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’இந்தியா - பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை’

Freelancer   / 2025 ஜூன் 20 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்​தியா - பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு நான்​தான் காரணம் என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல்​முறை​யாக ‘இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று உறு​திபட தெரி​வித்​துள்​ளார். 

இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அமெரிக்கா சென்​றுள்ள பாகிஸ்​தான் இராணுவ தளபதி பீல்டு மார்​ஷல் அசிம் முனீர், ட்ரம்பை சந்​தித்​துப் பேசி​னார். வெள்ளை மாளி​கை​யில் அவருக்கு விருந்து அளிக்​கப்​பட்​டது. இந்த சந்​திப்​புக்​குப் பிறகு ட்ரம்ப் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது ஈரான், இஸ்​ரேல் போர் மற்​றும் இந்​தி​யா​ உட​னான போர் நிறுத்​தம் குறித்த கேள்வி​களுக்கு ட்ரம்ப் பதிலளிக்கையில்,

பாகிஸ்​தான் இராணுவ தளப​திக்கு ஈரான் விவ​காரம் பற்றி நன்றாகத் தெரி​யும். இஸ்​ரேல், ஈரான் போர் பற்றி அவர் மகிழ்ச்​சி​யடைய​வில்​லை. பாகிஸ்​தான் இஸ்​ரேலுக்கு எதி​ரான நாடு அல்ல. அவர்​கள் இரு நாட்​டை​யும் உண்​மை​யில் நன்கு அறி​வார்​கள்.

எனினும், அவர்​கள் ஈரானை நன்கு அறிந்​திருக்​கலாம். என்ன நடக்​கிறது என்​பதை அவர்​கள் பார்க்​கிறார்​கள். அவர் (முனிர்) என்​ கருத்​துடன் உடன்​படு​கிறார். இந்​தியா உடனான போரை தொடராமல் பாகிஸ்​தான் அதை முடிவுக்கு கொண்​டு​வந்​துள்​ளது. இதற்​காக நன்றி சொல்​வதற்​காகத்​தான் பாகிஸ்​தான் இராணுவ தளபதி அசிம் முனிர் உடனான சந்​திப்பு தற்​போது நடந்​துள்​ளது.

போர்​நிறுத்​தம் ஏற்​ப​டா​விட்​டால், அது ஒரு அணுசக்தி போராக இருந்​திருக்​கலாம். இரண்டு நாடு​களும் பெரிய அணுசக்​தி​கள். ஆனாலும் போரை நிறுத்த அவர்​கள் முடிவு செய்​தார்​கள். இரண்டு புத்​தி​சாலிகள் போரை தொடர வேண்​டாம் என முடிவு செய்தார்கள். அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்​தியா மற்றும் பாகிஸ்​தானுடன் வர்த்தக ஒப்​பந்​தம் மேற்​கொள்ள நாங்​கள் பணி​யாற்றி வரு​கிறோம் என்று ட்ரம்ப் கூறி​னார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .