2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயார்’

Freelancer   / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக,  பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

“சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் அந்நாடு போருக்கு தயாராக வேண்டும். நம்மிடம் உள்ள இராணுவ ஆயுதங்களும், ஏவுகணைகளும் பார்வைக்கு வைக்க அல்ல. 

“நாட்டின் எந்தெந்த பகுதிகளில் நாம் அணு ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளோம் என்று யாருக்கும் தெரியாது. நம்மிடம் உள்ள அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி மட்டுமே உள்ளன. இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .