2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்த ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்காக இந்தியா மீது மேலதிகமாக 25 சதவீத வரியை விதிக்கும் நிறைவேற்றாணையொன்றை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.

அந்தவகையில் ஐக்கிய அமெரிக்காவுக்கான இந்திய இறக்குமதிகளின் மொத்த வரியானது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவால் விதிக்கப்பட்ட உயர்ந்த வரி வீதங்களில் இதுவொன்றாகும்.

புதிய வீதமானது 21 நாள்களில் இம்மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வருமென நிறைவேற்றாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X