2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இந்தியா வழியாக பங்களாதேஷ் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை

Freelancer   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஸுக்கு வழங்கப்பட்டு வந்த TRANS SHIPMENT வசதியை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

ஏப்ரல் 8ஆம் திகதியன்று, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதில், பங்களாதேஷ் தனது ஏற்றுமதி சரக்குகளை மூன்றாம் நாடுகளுக்கு, இந்தியாவில் உள்ள சுங்க நிலையங்கள் வழியாகவும், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் கொண்டு செல்ல அனுமதித்த 2020 ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த இரத்து உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .