Freelancer / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவில், புதன்கிழமை (26) காலை 6:55 மணிக்கு (2255 GMT) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
வடக்கு சுலவேசி மாகாணத்துக்கு அருகில் உள்ள கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி, சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 2021ஆம் ஆண்டு சுலவேசியை உலுக்கிய 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
27 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
37 minute ago