Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் மூர்க்கமான பப்புவா பிராந்த்தியத்தில் புதிய வன்முறையில் பாதிக்கப்பட்டோர், ஆர்ப்பாட்டக்காரர்களால் கொழுத்தப்பட்ட கட்டடங்களின் உயிருடன் எரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் புகலிடம் தேடிய நிலையில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று (24) தெரிவித்துள்ளனர்.
நியூ கினித் தீவின் மேற்கு அரைப்பகுதியான பப்புவானது இனவாதத்தாலும், சுயாட்சி தொடர்பான புதிய அழைப்புகளாலும் தூண்டப்பட்ட வாரக்கணக்கான போராட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே வமெனா நகரத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அரசாங்க அலுவலகமொன்றையும், ஏனைய கட்டடங்களையும் நேற்று எரித்த நிலையில் 22 பேர் இறந்துள்ளனர். வேண்டுமென்ரே ஏற்பட்ட தீக்களில் பாதிக்கப்பட்ட சிலர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், முன்னைய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20இலிருந்தே அவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில், வன்முறைகள் தொடர்பாக 700 பேர் சுற்றிவளைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சிலர் எரிக்கப்பட்டதாகவும், சிலர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், சிலர் நெருப்பில் சிக்கியதாக உள்ளூர் இராணுவத் தளபதி சந்திரா டியான்டோ கூறியுள்ளார்.
இந்நிலையில் வமெனாவில் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் பப்புவாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்தோனேஷியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள அகதிகளுக்கெதிராக வன்முறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்புப் படைகளும், கல்லெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்களும் மாகாணத் தலைநகர் ஜெயபுரவில் நேற்று மோதியதில் படைவீரரொருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago