Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 15 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடக்க காலத்தில் ராயல் தியேட்டர் என அழைக்கப்பட்ட பிரிஸ்டல் ஓல்ட் விக் திரையரங்கம், 1764 மற்றும் 1766 காலத்தில் கட்டப்பட்டது. திரையரங்கின் உண்மையான பங்குதாரர்களுக்கு வழங்குவதற்காக 1766 ஆம் ஆண்டு 50 வெள்ளி நாணயங்கள் அச்சிடப்பட்டன.
இந்த 50 பங்குதாரர்களும் திரையரங்கம் கட்டுவதற்காக தனித்தனியாக 18 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தொகையை வழங்கியுள்ளனர். திரையரங்கின் கட்டுமானத்திற்கு உதவியதற்காக இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. இதை வைத்து இந்த திரையரங்கில் நிகழ்த்தப்படும் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். இந்நிலையில் பிரிஸ்டல் ஓல்ட் விக், தங்களது நூற்றாண்டு கால கொள்கைக்கு மரியாதை அளிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளது
அதன்படி மதிப்புமிக்க இந்த 50 வெள்ளி நாணயங்கள் தற்போது ஏலம் விடப்படவுள்ளது. எப்படியும் ஒவ்வொரு நாணயமும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இந்த நாணயங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் எங்கள் திரையரங்கின் கொள்கையின்படி, குறிப்பிட்ட வெள்ளி நாணயம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு இந்த திரையரங்கில் நடைபெறும் ஒவ்வொரு காட்சிக்கும் இலவச டிக்கெட் தரப்படும்” என பிரிஸ்டல் ஓல்ட் விக் திரையரங்கம் அறிவித்துள்ளது.
35 minute ago
36 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
38 minute ago
2 hours ago