2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இனிமேல் அகதிகளுக்கு இங்கு இடம் இல்லை; ஜேர்மனி அதிரடி

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனில் இருந்து அகதிகளாக வருபவர்களைத்  தங்க வைக்க முடியாது என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்று வருகின்றது.

இதனால் உக்ரேனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டைய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

குறிப்பாக ஏராளமான மக்கள் ஜேர்மனியை நோக்கிப்  படையெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களைத் தங்க வைப்பதற்கு இடம் இல்லை என ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

 குறித்த அறிக்கையில் ” உக்ரேன் ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இது எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகவுள்ளது.

தற்போது விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு ஆகிய பிரச்சினைகளில் ஜேர்மனி மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

இதனால் பலர் தங்களது வீடுகளில் அகதிகளைத்  தங்க வைக்கும் நிலையில் இல்லை. எனவே அவர்கள் உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க வைக்க முடியாது”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X