Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் வியாழக்கிழமை (08) அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடந்த 1.5 வருட காலமாக அங்கு பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் பிராந்தியத்தில், பிஷின் மாவட்டத்தில், சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் கான் ககர் என்பவரின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.
“பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க செல்வதை தடுக்கும் வகையில்தான் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு, அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டு ஒரு 'ரிமோட்' கருவியினால் இயக்கப்பட்டுள்ளது" என பலூசிஸ்தான் பொலிஸ் அதிகாரி அப்துல்லா ஜெஹ்ரி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக, அங்கிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்லா சாயிஃப் உல்லா பகுதியில் மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் மொத்தமாக 28 பேர் பலியாகியுள்ளதுடன், 50 பேர் காயமடைந்துள்ளனர்.
தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களுக்கு பின்னணியில் பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் உள்ளதாகவும் உள்துறை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .