2025 மே 15, வியாழக்கிழமை

இராணுவ மேஜராக பென்குயின் நியமனம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் இராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. நோர்வேஜியன் அரச பிரிவு படைக்கு தளபதியாக இந்த பென்குயின் செயல்பட உள்ளது.

எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் பென்குயின் தளபதியாக பொறுப்பேற்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்தப் படைப் பிரிவை சேர்ந்த 150 வீரர்கள் கலந்து கொண்டனர்.வனவாழ்வு பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பிரத்தியேகமிக்க விழாவில் இந்த பென்குயினுக்கு மிக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.

ரீகல் பிளாக் (கருப்பு) நிறம் அதிகமாகவும், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் ஆங்காங்கே இடம்பெற்ற வகையிலும் பென்குயின் உள்ளது. நார்வேஜியன் அரச பிரிவு படைக்கு இதே நிறத்தில் தான் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் சீருடை வழங்கப்பட்டு வருகிறது. நில்ஸ் ஓலவ் என்ற பட்டம் இதற்கு முன்பு இரண்டு பென்குயின் பறவைகளுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்டிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .