2025 மே 19, திங்கட்கிழமை

இறுதி முறைப்பாடு தோல்வி: சிறைத்தண்டனையை ஆரம்பித்த முன்னாள் பிரதமர்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 12 ஆண்டு சிறைத்தண்டனை ஒன்றை ஆரம்பிப்பதற்காக சிறைச்சாலைக்கு மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் அனுப்பப்பட்டுள்ளார்.

ரஸாக்கின் மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச நிதி மய்யமான 1 மலேஷியா அபிவிருத்தி நிதியுடன் தொடர்புடைய மோசடியொன்றிலேயே குற்றச்சாட்டுக்களை ரஸாக் எதிர்நோக்கியிருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதமே ரஸாக் குற்றஞ்சாட்டப்பட்டபோதும் மேன்முறையிட்டீன்போது பிணையில் வெளிவந்திருந்தார்.

இதேவேளை, தனது தண்டனையை தாமதப்படுத்துமாறான ரஸாக்கின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X