2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இவரு மனுஷனா இல்ல மிருகமா?

Editorial   / 2025 ஜூலை 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓர் அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது இணையத்தைப் பரபரப்பாகி வருகிறது.  இந்த வீடியோ பாகிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ளது. எனினும் அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் மிகக் கொடூரமாக இருப்பதால், நாங்கள் அதனை தரவேற்றவில்லை. 

அதாவது ஒரு அறைக்குள் மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால், ஒரு நபர் ஒரு சிறுவனை வெறித்தனமாக தாக்கும் காட்சி ‘Pakistan ke Kalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதால் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோவில் குழந்தை வேதனையில் கதறிக் கதறிக் அழுவதும், அந்த நபர் இரக்கமே காட்டாமல் தாக்குவதோவதையும் காணலாம். அதோடு சிறுவனின் முகத்தில் பொருளொன்றை திணித்தும் செய்யும் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாக்கிய நபர் குழந்தையின் தந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வீடியோவில் காணப்படும் கொடூரம் குழந்தையின் உடலையும் மனதையும் பாதிக்கும் வகையில் இருப்பதால், இது பெற்றோர்களின் நடத்தை, ஒழுக்கநெறி மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவரை அடித்து ஒழுங்குபடுத்த முடியும் என்ற பார்வை மிகவும் மோசமானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தை வளர்ப்பில் சகிப்புத் தன்மை தேவையே தவிர வன்முறை எதற்கும் தீர்வு அல்ல என்பதனை இந்த வீடியோ வலியுறுத்துகிறது. குழந்தைகள் மீது கட்டுப்பாடும் பாசமும் கொண்ட முறையில் ஒழுக்கம் புகட்ட வேண்டும். பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் தாங்கள் காட்டும் செயல் குழந்தைகளின் வாழ்நாளை முழுவதும் தாக்கும் என்பதை உணர வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க சமூக விழிப்புணர்வும், நியாயமான சட்ட நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட வேண்டும் எனக் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X