2024 நவம்பர் 02, சனிக்கிழமை

இஸ்ரேலின் அடுத்த குறி ‘பால்பெக்’

Freelancer   / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரை, இஸ்ரேல் குறிவைத்துள்ளது. 

இதனால் அந்த நகரில் வசித்து வரும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு, இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளியேற  சொல்லும் இடத்தில், யுனெஸ்கோ பாரம்பரிய பழங்காலத்து ரோமன் டெம்பிள் காம்ப்ளக்ஸ் உள்ளது.

பால்பெக் நகர், பெகா பள்ளத்தாக்கிற்கு செல்லும் முக்கிய வழியாகும். இந்த பகுதிகளை ஏற்கெனவே இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளது.

ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக வெளியேறும் எச்சரிக்கையை இஸ்ரேல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .