2024 மே 18, சனிக்கிழமை

இஸ்ரேலிய இராணுவ தளத்தில் பாரிய தீ விபத்து!

Freelancer   / 2024 மே 15 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலிய, ரமாத் கானில் உள்ள டெல் ஹாஷோமர் இராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

குறித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 28 தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் கூறுகின்றன.

தீக்கு இரையான கிடங்குகள் பல்வேறு உபகரணங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .