Freelancer / 2025 ஜூன் 16 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகின. இதுவரை 140 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்த நாட்டின்மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், இராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேற்று 3 ஆவது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் 150 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளில் விழுந்தன. இஸ்ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் வேறு சில பகுதிகள் மீதும் ஏவுகணைகள் விழுந்தன.
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (a)


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .