Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் சிக்காகோ பகுதியில் 32 வயது இஸ்லாமிய பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார். 71 வயது மதிப்புள்ள முதியவர் ஒருவர் வீட்டுக்குள் சனிக்கிழமை (14) திகதிகத்தியுடன் புகுந்துள்ளார்.
அப்போது, திடீரென வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது மகனையும் வெறித்தனமாக முதியவர் கத்தியால் தாக்கினார். 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்துள்ளார் இதனால் சிறுவனின் உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த அந்த பெண் தனது மகனை காப்பாற்ற போராடியுள்ளார். அப்போது, அவரையும் முதியவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண்தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், பெண்ணையும், சிறுவனையும் பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், நில உரிமையாளராக இருந்து வரும் குறித்த நபர் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை கத்தியால் குத்திக்கொன்றது தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .