Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு நைஜீரியாவின் பதற்றமான பொர்னோ மாநிலத்தில், நடவடிக்கையொன்றில் குறைந்தது 30 பேரை இஸ்லாமிய ஆயுததாரிகள் கொன்றதுடன், சிறுவர்களையும், பெண்களையும் கடத்திச் சென்றதாக மாநில அரசாங்கப் பேச்சாளர் அஹ்மட் அப்துர்ரஹ்மான் புன்டி நேற்றுத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தாக்குதலானது, பொர்னோ மாநிலத் தலைநகர் மைடுகுரியை இணைக்கின்ற முக்கியமான நெடுஞ்சாலையொன்றிலுள்ள ஒளனோ கிராமத்தையே இலக்கு வைத்துள்ளது.
கடுமையான ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்த ட்ரக்குகளில் சென்ற இஸ்லாமிய ஆயுததாரிகள் சிறுவர்களையும், பெண்களையும் கடத்த முன்னர் கொன்றதாகவும், எரித்ததாகவும், கொள்ளையிட்டதாகவும் அஹ்மட் அப்துர்ரஹ்மான் புன்டி தெரிவித்துள்ளார்.
இரவுக்காக நிறுத்தியிருந்த பயணிகளை இஸ்லாமிய ஆயுததாரிகள் இலக்கு வைத்ததுடன், வாகனங்களைக் கொளுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த பின்னர், பெரும்பாலும் மோட்டார் வாகனங்களில் பயணித்த குறைந்தது 30 பேரை இஸ்லாமிய ஆயுததாரிகள் கொன்றதாகவும், 18 வாகனங்களை அழித்ததாகவும் அஹ்மட் அப்துர்ரஹ்மான் புன்டி தெரிவித்துள்ளார்.
மைடுகுரிக்கு மேற்காக 25 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் மேற்கு ஆபிரிக்க கிளை செயற்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், இத்தாகுதலுக்கு உடனடியாக எவரும் உரிமை கோரியிருக்கவில்லை.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago