R.Tharaniya / 2025 நவம்பர் 12 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கூடாரமாக செயல்படுகிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அடிக்கடி தொழில்போட்டியால் மோதல்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், , மச்சாலா நகரின் எல் ஓரோ சிறைச்சாலையில் இரு பிரிவைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கையெறி குண்டு வீசி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் 4 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் மூச்சுத்திணறி இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈகுவடாரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதல் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. எனவே அதிதீவிர பாதுகாப்புடன் கட்டப்பட்டு வரும் சிறைச்சாலையை அதிபர் டேனியல் நோபோவா அடுத்த மாதம் திறக்க உள்ளார். இதனையடுத்து எல் ஓரோ சிறையில் உள்ள சில கைதிகளை அங்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago