Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரேபியக் கடலில் ஏப்ரஹாம் லிங்கன் விமானந்தாங்கிப் கப்பலை நோக்கிச் சென்ற ஈரானிய ட்ரோனொன்றை ஐக்கிய அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை (03) சுட்டு வீழ்த்தியதாக ஐ. அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
விமானந்தாங்கிக் கப்பலை நோக்கி தெளிவில்லாத எண்ணத்துடன் ஈரானிய ஷகிட்-139 ட்ரோன் பறந்ததாகவும், எஃப்-35 ஐ. அமெரிக்க தாக்குதல் ஜெட்டால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐ. அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
தற்பாதுகாப்பு, விமானந் தாங்கிக் கப்பல் மற்றும் கப்பலிலுள்ள படைவீரர்களைப் பாதுகாப்பதற்காக ஆப்ரஹாம் லிங்கலிருந்தான எப்-35சி தாக்குதல் ஜெட்டானது ஈரானிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஐ. அமெரிக்க இராணுவ மத்திய கட்டளையின் பேச்சாளரொருவரான கடற்படை கப்டன் டிம் ஹோக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட சில மணித்தியாலங்களில் ஐ. அமெரிக்க கொடியுடையை ஐ. அமெரிக்கப் பணியாளர்களைக் கொண்ட வர்த்தகக் கப்பலை ஹொர்முஸ் நீரிணையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைகள் அச்சுறுத்தியதாக ஐ. அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. இரண்டு புரட்சிகர காவலர் படகுகளும், ஈரானிய மொஹஜெர் ட்ரோனும் எம்/வி ஸ்டெனா இம்பெரட்டிவ்வை உயர் வேகத்தில் அணுகியதாகவும், கப்பலில் இறங்கி எண்ணெய்க் கப்பலை கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தியதாக ஹோக்கின்ஸ் கூறியுள்ளார்.
கப்பலின் இயந்திரத்தை நிறுத்துமாறும், தரையிறங்குவதற்கு தயார்படுத்துமாறும் ஈரானிய படகுகள் உத்தரவிட்டதாக கடல் ஆபத்து முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கப்பல் வேகமெடுத்து பயணத்தை தொடர்ந்துள்ளது.
அப்பகுதியில் இயங்கிய ஐ. அமெரிக்க கடற்படைக் கப்பலான மக்போலை ஸ்டெனா இம்பெரட்டிவ்வை பாதுகாப்புடன் கொண்டு சென்றதாக ஹோக்கின்ஸ் கூறியுள்ளார்.
2 hours ago
04 Feb 2026
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
04 Feb 2026
04 Feb 2026