Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

செய்மதியொன்றைத் தாம் வெற்றிகரமாக நேற்று ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளபோதும், புவிச் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதில் தோல்வியடைந்துள்ளது.
இஸ்லாமியப் புரட்சியின் 41ஆவது ஆண்டு நினைவுநாள், முக்கியமான ஈரானின் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பாகவே ஸஃபார் எனும் குறித்த செய்மதியை ஏவும் முயற்சி இடம்பெற்றிருக்கின்றது.
இலங்கை நேரப்படி நேற்றிரவு 9.15க்கு ஸஃபார் செய்மதியை ஈரான் ஏவியிருந்த நிலையில், புவிச்சுற்றுவட்டப்பாதையை அடைய செய்மதி தவறியதாக ஈரானின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் செய்மதி வெற்றிகரமாக ஏவப்பட்டதாகத் தெரிவித்த பாதுகாப்பமைச்சின் விண்வெளிப் பிரிவின் பேச்சாளர் அஹ்மட் ஹொஸெய்னி, 90 சதவீதம் சென்றதாகவும் 540 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்ததாகவும், ஸஃபார் செய்மதியை விண்வெளிக்கு சிமொர்ஹ் றொக்கெட் தள்ளியதாகவும் கூறியுள்ளார்.
எனினும், எதிர்பாராதவிதமாக இறுதிக் கணங்களில் செய்மதியை புவிச் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்புவதற்கான வேகத்தை றொக்கெட் அடைந்திருக்கவில்லை என ஈரானிய அரச தொலைக்காட்சிக்கு அஹ்மட் ஹொஸெய்னி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய குறுந்தூர ஏவுகணையொன்றையும், செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்புவதற்கு வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை இயந்திரங்களையும் நேற்று வெளிப்படுத்தியிருந்தது.
கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தமது பயம் செய்மதியானது புவிச்சுற்றுவட்டப்பாதையை அடையத் தவறியதாக ஈரான் அறிவித்திருந்தது. அச்செய்மதியானது ஈரானிலுள்ள சுற்றுச்சூழல் தரவைச் சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தது.
இதேவேளை, தமது செய்மதி ஏவல் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறொன்றால் வெடிப்பொன்று ஏற்பட்டதாக கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் ஈரான் உறுதிப்படுத்தியிருந்தது.
 
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago