Freelancer / 2024 ஜூலை 07 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த ஜூன் 19ஆம் திகதி நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்தது.
இதில் முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசஸ்கியான் 42.5 சதவீத வாக்குகளும், 2ம் இடம் பெற்ற சையது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளும் பெற்றனர். ஆனாலும், ஈரான் அரசியலமைப்பு சட்டப்படி, வெற்றி வேட்பாளர் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும். இதனால், முதல் 2 இடங்கள் பிடித்த பெசஸ்கியான் மற்றும் சையது ஜலீலி இடையே 2ஆம் கட்ட தேர்தல் கடந்த 5ஆம் திகதி நடந்தது.
இதில், பெசஸ்கியான் 1.63 கோடி வாக்குகளும், ஜலீலி 1.35 கோடி வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம், ஈரான் ஜனாதிபதியாக பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் அடுத்த ஒருமாதத்திற்குள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.S
4 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago