2025 மே 15, வியாழக்கிழமை

உக்ரேனுக்கு அமெரிக்காவின் கொத்தனி குண்டுகள்

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனுக்கு கிளஸ்டர் குண்டுகளை (Cluster Bombs) வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு கனடா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 500 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் உக்ரேனுக்கு cluster குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரேன் வசம் வெடிமருந்துகள் குறைந்து வருகின்றன. இதனால், ஆயுதங்களை வழங்கும்படி அமெரிக்காவிடம் உக்ரேன் உதவி கோரியது. இதனையடுத்து, உக்ரேனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்க பைடன் ஆணையிட்டுள்ளார்.

இந்த கிளஸ்டர் குண்டுகளின் பயன்பாடு மற்றும் தயாரிப்பை 120 திற்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன. கிளஸ்டர்  குண்டுகள், வெடிக்கும்போது அதில் இருந்து பல குண்டுகள் காற்றில் சிதறும். அந்த குண்டுகள் மோசமான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும். சில குண்டுகள் உடனடியாக வெடிக்காமல் இருக்கும். யாரும் எதிர்பாராத வேளையில் வெடித்து அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .