2025 மே 16, வெள்ளிக்கிழமை

உக்ரேனுக்கு இராணுவ உதவி

Freelancer   / 2023 ஜூன் 26 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷிய- உக்ரேன் போரில் உக்ரேனுக்கு உதவி வரும் நாடுகளில் ஒன்றாக தற்போது நேட்டோ அமைப்பில் சேராத அவுஸ்திரேலியா உதவி வருகிறது. அந்நாடு சமீபத்திய உதவியாக, உக்ரேனுக்கு கூடுதலாக 70 இராணுவ வாகனங்களை அனுப்புகிறது.

110 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ($73.5 மில்லியன்) தொகுப்பை உதவியாக அறிவித்த ஜனாதிபதி அந்தோணி அல்பானிஸ், "இந்த உதவி, ரஷியாவில் சென்ற வார இறுதியில் நடந்த உள்நாட்டு இராணுவ குழப்பத்திற்கு முன்பே பரிசீலனையில் இருந்தது    ரஷியாவின் நடவடிக்கைகளை கண்டித்து எதிர்ப்பதிலும் உக்ரேன் வெற்றியை அடைய உதவுவதிலும் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது'' என்று கூறினார்.

எனினும், கீவ் கோரிய ஹாகெய் இலகு ரக கவச ரோந்து வாகனங்களோ அல்லது புஷ்மாஸ்டர் காலாட்படை வாகனங்களோ இதில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .