Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன், ரஷ்யா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்ய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரேன் நம்பி உள்ளது. உக்ரேன்-ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது போர்த்திறனை அதிகரிப்பதற்காக எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரேன் முடிவு செய்தது. இதனால் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரேன் அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனால் அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த எப்-16 போர் விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை அதன் அனுமதி அவசியம் ஆகும். இதற்கிடையே, எப்-16 விமானங்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு இந்த விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் உக்ரேன் வான்பாதுகாப்பு மேலும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உக்ரேனுக்கு எப்-16 விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் அரசுகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் கூறுகையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று உக்ரைனுக்கு எப்-16 ரக விமானங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக, நெதர்லாந்து அரசும் உக்ரேனுக்கு எப்-16 விமானங்களை அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 May 2025
14 May 2025