Freelancer / 2024 ஜூலை 26 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய சூடானில் இராணுவ வீரர்கள் தினமும் வரிசையில் நிற்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு செய்தால் மட்டுமே தங்களது குடும்பத்துக்கு தேவையான உணவும் அத்தியாவசிய பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கிறதாகவும் கூறப்படுகின்றது.
பஞ்சத்தை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்களின் குடும்பத்துக்கு தேவையான உணவைப் பெற்றுக்கொள்ள வரும் பெண்கள் இராணுவ வீரர்களால் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சூடான் இராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF ஆகிய படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது.
இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் உயிரிழந்ததுடன் போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், RSF இராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக சூடான் பெண்கள் பலர் கார்டியன் இதழ் கள செய்தியாளர் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தங்களின் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கு வேறு வழி தங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
போரினால் கைவிடப்பட்ட வீடுகளில் முகாமிட்டுள்ள இராணுவ வீரர்கள் பெண்களை வரிசையில் நிறுத்தி பாலியல் வன்புணர்வு செய்கின்றதாக கூறப்படுகின்றது. S
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago