Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உத்தரப் பிரதேச சட்டசபையின் பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினர் குல்தீப் செங்காரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வன்புணரப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியொருவர் காயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளதுடன், இரண்டு பெண்கள் இறந்த உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் நேற்று இடம்பெற்ற விபத்தையடுத்து குல்தீப் செங்கார் மீது கொலை வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.
விபத்தானது தனது மகளை இல்லாமற் செய்வதை நோக்கமாகக் கொண்டது எனவும், தங்களுக்கெதிராக சிறையிலிருந்து குல்தீப் செங்கார் திட்டமிட்டதாகவும் குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொல்லப்பட்ட இரண்டு பெண்களிலொருவர் வன்புணர்வு வழக்கின் சாட்சியொருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆரம்ப கட்ட விசாரணைகள் குறித்த சம்பவம் விபத்து என வெளிக்காட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டவர்கள் சிறுமியுடன் குறித்த சம்பவத்தின்போது செல்லாததுடன், சிறுமி பயணித்த காரை மோதிய ட்ரக்கின் இலக்கமானது கறுப்பு வர்ணப்பூச்சால் மறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
குறித்த சிறுமியும், அவரது தாயாரும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தநாயத்தின் வீட்டுக்கு முன்னால் தம்மை எரிக்க முயன்றபோதே குறித்த வழக்கு கவனம் பெற்றிருந்தது.
12 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
3 hours ago